வரலாற்றில் முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு

வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் 70.74 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 70.95 ஆக இருந்தது.