இறகுப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு

எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனத்தின் விளையாட்டுத்துறை மற்றும் தீஸ்மாஸ்போர்ட் 30 இணைந்து தென்னிந்திய அளவில் குழந்தைகளுக்கான இறகுப்பந்து போட்டியை எஸ்.என்.எஸ் உள் விளையாட்டரங்கில் நடத்தியது.

இதில் 10,13,15,17,19 வயது வரம்பிற்குட்பட்ட பிரிவுகளில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் 46 வீரர் மற்றும் வீராங்கனைகள் முதலிடத்தையும், 46 பேர் இரண்டாமிடத்தையும், 96 பேர் மூன்றாவது மற்றும் நான்காம் இடத்தையும் தக்க வைத்து கொண்டனர்.

இப்போட்டிகளில் தமிழ்நாடு மாநிலம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. பரிசளிப்பு விழாவில் எஸ்.என்.எஸ் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் செந்தூரபாண்டியன் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசளித்தார்.