கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீரியம்பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா பணியை மேற்கொண்டனர்.

இப்பணியை வீரியம்பாளையம் வார்டு செயலாளர் பொன்னுசாமி மற்றும் தூய்மை துறை ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் துவக்கிவைத்தனர். தூய்மை இந்தியா திட்டத்தை ஒரு இயக்கமாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினர். கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதல்வர் மாதவி சமுதாய நலனில் மாணவர்களை பங்கேற்க ஊக்குவித்தார்.

உணவு உறைகள், பிளாஸ்டிக்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற கழிவுப்பொருள்களை மாணவர்கள் சேகரித்தனர். மற்றும் அவற்றை மக்கும்குப்பை, மக்காதகுப்பை என பிரித்து குப்பைகளை அகற்றினர். மாணவர்கள் குப்பைகளை பிரிப்பதை பற்றியும் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.