ஸ்ரீ அன்னபூர்ணாவின் தீபாவளி சிறப்பு ஸ்வீட் மேளா துவக்கம்

ஸ்ரீ அன்னபூர்ணாவின் தீபாவளி ஸ்வீட் மேளா அக்டோபர் 19 முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை 6 நாட்கள் மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம், பீப்பிள்ஸ் பார்க், கணபதி, அவிநாசி ரோடு ஆகிய கிளைகளில் நடைபெறுகிறது.

ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட் மேளாவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அன்னபூர்ணாவில், அன்னபூர்ணா குழுமத்தின் துணை தலைவர் சுந்தரராஜன், நிதி மேலாளர் சிவ ஷங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதல் விற்பனையை சோடல்டெக் குழுமம் இயக்குனர் சுப்ரமணியம் மற்றும் சோடல்டெக் குழுமத்தின் தலைமை மேலாளர் மூர்த்தி பெற்றுக்கொண்டனர். உடன் கிளை மேலாளர் ரோஜர் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் புது புது ரகங்களில் இனிப்புகளையும் கார வகைகளையும் அறிமுகப்படுத்தி வரும் ஸ்ரீ அன்னபூர்ணாவில் இந்த தீபாவளியை உங்கள் பிரியமானவர்களிடம் கொண்டாட கிபிட் கூப்பன்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.

உங்கள் அன்பானவர்களுக்கு கிப்ட் கூப்பன்களை பரிசளித்து இந்த தீபாவளியை ஸ்ரீ அன்னபூர்ணா இனிப்புகளுடன் தித்திப்பாய் கொண்டாடி மகிழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு: 0422 4522444