“நெருப்புடன் விளையாடாதீர்கள் அது சுட்டெரித்து விடும்” சீனா அதிபர்ஆவேசபேச்சு

தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, ‘நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என நம்புகிறோம்’ என சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசினார். தைவானை சொந்தம் கொண்டாடும் விஷயத்தில் விலகியிருக்குமாறுஷி ஜின்பிங்கிடம்  பைடன் தெரிவித்ததாகவும் அதற்கு நெருப்புடன் விளையாடாதீர்கள், அது சுட்டெரித்து விடும் என்று சீன அதிபர் ஆவேசமாக பேசி எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த நவம்பர் மாதத்தில் இருவரும் பேசியபோதும் பைடனை சீன அதிபர் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானின் சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் அந்நிய சக்திகளின் தலையீட்டை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.