ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜி சிறை செல்ல நேரிடும்  – அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக அரசு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி 220 கோடி ரூபாயை கமிஷனாக பெற்றிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்ப்பில் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றி  பேசினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது, மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாக செந்தில்பாலாஜி கூறுகிறார். அந்த கடிதத்தை செந்தில்பாலாஜி காட்ட வேண்டும். கருணாநிதியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு  செந்தில்பாலாஜி ஊழல் செய்கிறார்.  மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20 சதவிகித கமிஷன் பெறுகிறார்கள்.

மின் உற்பத்தி  திறனை குறைத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிடும் எனவும் தெரிவித்தார்.