பி.எஸ்.ஜி – ஐ டெக் கல்லூரியில் ஆண்டு விழா

பி.எஸ்.ஜி தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கல்லூரியில் (பி.எஸ்.ஜி ஐ டெக்) தக்ஷா 2022 என்ற பெயரில் 7 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் சந்திரமோகன் அனைவரையும் வரவேற்று நடப்பாண்டிற்கான ஆண்டு அறிக்கையை வாசித்து, கல்லூரியின் சாதனைகளை பற்றியும், பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களின் பட்டியலைகூறி, கல்லூரியில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை வகித்தார்.

இந்த ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கான வெங்கடசாமி நாயுடு நினைவு விருதினை மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறையைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சுசித்ரா பெற்றனர்.

சிவில் இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மாணவி ரோவினா ரேச்சல், கம்ப்யூட்டர் சயன்ஸ் & இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மாணவி பால கீர்த்தனா, எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மாணவர் கோலப்பன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேசன் இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரீ நிதா மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மாணவர் கிரித்திக் ஜவகர் ஆகியோர் துறைவாரியாக சிறந்த வெளிசெல்லும் மாணவர்களுக்கான விருதினை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து ‘தரங்கினி’ என்ற கல்லூரியின் இதழ் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

கோவை தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைவர் வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை பற்றி மாணவர்களிடம் சுவரசியமாக எடுத்துக் கூறினார்.

சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், வாழ்வில் நமக்கு மிகவும் சௌரியமான இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் என்றார்.

மேலும் கவனமாக ஒரு செயலை செய்யும் பொழுது தான் அதில் வெற்றி பெற முடியும் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறைவாக கல்லூரியின் செயலாளர் மோகன்ராம் நன்றி உரை ஆற்றினார்.