அங்கன்வாடியில  எல்.கே.ஜி, யு.கே.ஜி வந்தாச்சு

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மாற்றம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுக்குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‘அங்கன்வாடி மையங்களிலேயே எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் செயல்படும். அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே, எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5 ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர்’ என, கூறினார்.