ஃபிளிப்கார்ட், ஃபோன்பே, மிந்த்ரா மற்றும் கிளியர்ட்ரிப் மின் வர்த்தகம் சூப்பர் காயின்களை வெளியிட்டது

இந்தியாவின் உள்நாட்டு மின் வர்த்தகச் சந்தையான ஃபிளிப்கார்ட், கடந்த ஆண்டில் அதன் சூப்பர் காயின் வெகுமதி திட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஃபிளிப்கார்ட், மிந்த்ரா, கிளியர்ட்ரிப் மற்றும் ஃபோன்பே ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையிலும்  நாணயங்களை, ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் சூப்பர் காயின்களை வெளியிடுகிறது.

ஃபிளிப்கார்ட்டில் பங்குபெறும் விற்பனையாளர்களிடமிருந்து எந்தவொரு தயாரிப்பையும் வாங்கும் போதும், கடையை அணுகும் போதும், மிந்த்ராவில் சமீபத்திய பேஷன் ஸ்டைல்களை வாங்கும் போதும், கிளியர்ட்ரிப்பில் பயண முன்பதிவு செய்யும் போதும் அல்லது ஃபோன்பே மூலம் ஆயிரக்கணக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்களுக்கு பணம் செலுத்தும் போதும் சூப்பர் காயின்களைப் பெறலாம்.

இன்றைய சூப்பர் காயின் வாடிக்கையாளர்களில் 58% பேர் இந்தியாவில் உள்ள T2 & T3 பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அதிக இந்திய மக்களுக்கு நம்பிக்கையான வெகுமதிகளை அணுகும் நோக்கத்துடன் இது சீரமைக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் லாயல்டி திட்டத்தின் மூத்த இயக்குநர் சிராக் வோரா கூறியதாவது, “ஃபிளிப்கார்ட்டில், மின் வர்த்தகத்தை மேலும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்கும் அணுகலை ஜனநாயகப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறோம்.

எங்கள் சூப்பர் காயின் திட்டம் வாடிக்கையாளர் உறவுகளை வளர்ப்பதற்கும், அனைவரது ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் அதிக மதிப்பை வழங்குவதற்குமான இலக்குடன் உருவாக்கப்பட்டது” என்று கூறினார்.