ஆதரவற்றவரை மீட்டெடுத்த பாரத மாதா

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் குடும்பங்களை இழந்த, பிறவிக்கண் தெரியாத நபரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

கோவை பொள்ளாச்சி வடக்கு சின்னநெகமம் ஊராட்சி மன்றதலைவர் செந்தில்பிரபு, பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சேவைகளை முகநூல் பக்கத்தில் பார்த்து அவர்களை தொடர்பு கொண்டு தங்கள் ஊரில் குடும்பங்களை இழந்து தெருவோரம் சுற்றித்திரியும் பிறவிக்கண் தெரியாத மாரிமுத்து என்ற நபரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்திடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர் மற்றும் அவரது குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து அந்த நபரை கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் சேர்த்தனர். இந்த மீட்டெடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பொள்ளாச்சி (வ) சின்னநெகமம் ஊராட்சி மன்றத்தலைவருக்கும், சந்திராபுரம்-சாலைப்புதூர் ஊராட்சி மன்றதலைவர் ரமேஷ்க்கும் மற்றும் அன்பு இல்ல நிர்வாகிகளுக்கும் பாரதமாதா நன்றிகளை தெரிவித்தனர்.