இந்துஸ்தான் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் கல்வியியல் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக டேலண்ட் அகுஸ்சிஸ் குளோபலின் தலைவர் முகமது சுகைல் கலந்துகொண்டார். மேலும், இந்துஸ்தான் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக இணைச்செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் குட்டியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இளநிலை கல்வியியலில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும், நிர்வாகத்தால் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.