சந்திலே சிந்து பாடும் பாஜக

அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு பாஜக தமிழ்நாட்டில் வளரப் பார்க்கிறது. நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு பாஜக துரோகம் இழைத்துள்ளது என, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டினார்.

அதிமுக வை பின்னுக்கு தள்ளி விட்டு, திமுகவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி, ஆளும்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி பாஜக தான் என்ற நிலையில் இருக்கும்போது, திடீரென விழித்துக்கொண்டு பாஜகவுக்கு எதிராக  குரல் கொடுத்துள்ளார் பொன்னையன்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, திமுகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக. ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டங்களையோ மற்றும் விமர்சனங்களையோ நடத்தாமல் அமைதி காத்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திய பாஜக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, பாஜக தான் பிரதான எதிர்க்கட்சியாக நிலைநாட்டுவதாக அதிமுகவினர்களுக்கிடையில் கேள்விகள் எழுப்பட்டது.

கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, சந்துல சிந்து பாடும் வகையில், இன்று அதிமுக அமைதியாக இருக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக உரக்க குரல் கொடுத்து வருகின்றது.

இதனையடுத்து, ஆளும் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி, அதிமுக கட்சியா இல்ல பாஜக கட்சியா  என்ற கேள்விக்கு ஏற்றவாறு, மக்களிடத்திலும், அரசியல் வட்டாரத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக அமைதி காத்துக்கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் பரவலாக எழுந்து கொண்டிருக்கும் நிலையில்தான், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன் பாஜகவுக்கு எதிராக பேசினார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பொன்னையன், ‘அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு பாஜக தமிழ்நாட்டில் வளரப் பார்க்கிறது’ பாஜக அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அந்தக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும், தமிழக நலனுக்கும் நல்லதல்ல.

தமிழக உரிமைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. ‘காவிரி நதிநீர் – முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக பாஜக இரட்டை வேடம் போடுகிறது. நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு பாஜக துரோகம் இழைத்துள்ளது’ என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.