கே.ஐ.டி கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்

கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் “INTERNATIONAL CONFERENCE ON ARTIFICIAL INTELLIGENCE , MATERIAL SCIENCE AND RENEWABLE ENERGY” (ICAIMSRE’22) என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமச்சந்திரா (Scientist-G & Technology Director, Gas Turbine Research Establishment, DRDO-Bangalore) மற்றும் வெங்கடேச பழனிச்சாமி (Dean-Agriculture College & Research Institute, Tamilnadu Agricultural University, Coimbatore) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் பேசுகையில்: செயற்கை நுண்ணறிவு, பொருள் அறிவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆகியவற்றில் இருக்கும் பயன்பாடுகள் மற்றும் அதில் இருக்கும் சவால்களை பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர். ஆராய்ச்சி துறையில் பொறியியல் மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகள் பற்றியும் விளக்கினர்.

இக்கருத்தரங்கத்தில் சர்வதேச அளவில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட போரசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 350 ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டது. இதில் 245 ஆராய்ச்சி கட்டுரைகள் இக்கருத்தரங்கத்தில் விவாகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லாரியின் துணைத்தலைவர் இந்துமுருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத் தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.