கோவை மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரதாப் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

இவர் இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பொறுப்பில் இருந்தார்.

கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராஜகோபால் சுன்கரா, சென்னை குடிநீா் வடிகால் வாரிய செயல் இயக்குநராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.

பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஆணையாளர் பிரதாப், கோவை தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் நகரம் எனவும், கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்ற வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி தெர்வித்து கொள்வதாகவும் கூறினார்.

இங்கு நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர், மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், மேயர் ஆகியோர் வழிக்காட்டுதலின் படி அடிப்படை வசதிகளை கண்டறிந்து அதனை தீர்க்கும் பணிகளை முதலில் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாநகராட்சியில் குறைதீர்க்கூட்டம் நடைபெறவில்லை என சிலர் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அதனை மேயருடன் கலந்துரையாடி பிரதிவாரம் மேயர் தலைமையில் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனக்கு இது புதிய மாவட்டம் என்பதால் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும் சில விஷயங்களை சிறப்பாக செய்துள்ளார் எனவும் அதனையும் தொடர்ந்து கடைப்பிடித்து அதில் மேன்மை படுத்த வேண்டியதையும் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அரசு அலுவலர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.