இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள் காத்து இருக்கிறது. ! மிஸ்பண்ணிடாதீங்க..!

சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பட உள்ள 20 மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 20

பணி: Manager (Information Security)

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

 

பணி: Senior Manager (Information Security)

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

 

பணி: Manager (Information System Audit)

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

 

பணி: Senior Manager (Information System Audit)

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி: Computer Science/ Computer Technology/ Computer Science & Engineering/ Computer Engineering/  Information Technology/ Electronics & Communication/ Information Security/ Cyber Security பிரிவில் B.E. / B. Tech அல்லது முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500, SC/ST பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த .வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள்  www.iob.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2018