கே.ஜி மருத்துவமனையில் தீயணைப்பு விழிப்புணர்வு

கே.ஜி மருத்துவமனையில் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 6 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

தீயில் இருந்து மக்கள் மற்றும் வனவிலங்குகளின் உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிப்பதும், நன்றி தெரிவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கம். இதனையொட்டி கே.ஜி மருத்துவமனையில் தீயணைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதனை கையாள்வது என்பது குறித்து ஊழியர்களுக்கு, தீயணைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் செய்முறையுடன் தீ அணைப்பு குழுவினர் இதனை விளக்கினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் அழகர்சாமி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தீயணைப்பு குறித்த தகவல்களை பணியாளர்களுக்கு வழங்கினர்.