எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு விழா

எஸ்.என்.எஸ்  தொழில்நுட்ப கல்லூரியின்  2022க்கான விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்  கோவில்பாளையம் ஆய்வாளர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  கௌரவ விருந்தினராக  கோகுல் ராஜ் கலந்து கொண்டார்.

தடகள மற்றும் விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினருடன்  எஸ்.என்.எஸ்  தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குநர் அருணாச்சலம், முதல்வர் செந்தூர் பாண்டியன், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு  பரிசளித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர், உடற் கல்வி இயக்குநர் தினகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.