மாணவியின் சமூக சேவைக்கு ‘தங்கப் பெண்ணே விருது’

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சி.நிவேதா தங்கப் பெண்ணே விருதினை பெற்றுள்ளார்.

கலை, இலக்கியம், விளையாட்டு, தட்டச்சு பயிற்சி, கராத்தே போன்ற அனைத்து துறைகளிலும் இவர் முதலிடம் பெற்றுள்ளதோடு சமூக சேவையும் செய்து வருகிறார்.

இவரின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டி கோவை பெரிய கடைவீதியில் கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் DAR ஜூவல்லரியின் 91 வது ஆண்டு துவக்க விழாவை சக்தி வருட கொண்டாட்டமாக கொண்டாடிவரும் மங்கையர்க்கரசி சுவாதி அஸ்வின், மாணவிக்கு தங்கப் பெண்ணே விருது வழங்கி பாராட்டியுள்ளார்.