மாரத்தான் போட்டி: 1000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

கோவை நேரு ஸ்டேடியத்தில் கோயம்புத்தூர் விழாவின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் செந்தில் வளவன், இந்திய ஆயுதப் படைகள், இந்திய கடற்படை கேப்டன் விஜய் சிங் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுங்கரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

வாங்க கொண்டாடலாம் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பாளர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் ஓடினார்கள். இதில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான 21.1 கி.மீ ஓட்டத்தில் ஜபா குமார் முதல் இடத்தையும், வேலுமாயல் இரண்டாம் இடத்தையும், சன்வால்ராம் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான 21.1 கி.மீ ஓட்டத்தில் பவித்ரா முதலிடத்தையும், ஷில்பா இரண்டாம் இடத்தையும், நிவிதா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான 10 கி.மீ ஓட்டத்தில் சதீஷ் குமார் முதலிடத்தையும், யோகேஷ் இரண்டாம் இடத்தையும், விமல் ராஜ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான 10 கி.மீ ஓட்டத்தில் நந்தினி முதலிடத்தையும், கிருஷ்ணவேணி இரண்டாம் இடத்தையும், கமலி மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான 5 கி.மீ ஓட்டத்தில் கலையரசன் முதலிடத்தையும், சுனில் இரண்டாம் இடத்தையும், ஆர் டி ராவ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டத்தில் ஹாசினி கோவிந்த்ராஜ் முதலிடத்தையும், சுனைனா இரண்டாம் இடத்தையும், சுமித்ரா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.