தி ட்ராவெல்லிங் புட்டி நடத்திய உணவு போட்டி

தி ட்ராவெல்லிங் புட்டி என்ற குழுவின் சார்பில் ஆரோக்கியமான உணவு என்ற தலைப்பில் உணவு தயார் செய்யும் போட்டிகள் நடைபெற்றது.

அனுராக் மகேஸ்வரி, பத்மா பாலமுருகன் ஆகியோர்களால் முகநூல் பக்கத்தில் தி ட்ராவெல்லிங் புட்டி எனும் குழு கடந்த 5 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கோவை உட்பட்ட தமிழகத்தை சேர்ந்த 16 வயதிலிருந்து 75 வயது வரையிலான முதியோர் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்த குழு மூலம் உணவு முறைகள், உணவு தயார் செய்து காட்சிப்படுத்தபடுதல், உணவு போட்டிகள் என உணவு பண்பாட்டுகளை வளர்ப்பதை மையமாக கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கோவையில் ஆரோக்கியமான உணவு என்ற தலைப்பில் உணவு தயார் செய்யும் போட்டிகள் நடைபெற்றது. 45பேர் கலந்து கொண்ட இதில் சைவ மற்றும் அசைவ உணவுகளை தயார் செய்து அசத்தினர்.

இந்தப்போட்டியில் அசைவ உணவில் பினு ஜேவியரும், சைவ உணவில் முதலிடத்தை பிங்கி பாப்னாவும், இரண்டாம் இடத்தை ஸ்ரீட்ஷி ஜெயின் என்பவரும் மூன்றாம் இடத்தை சோனம் குன்பியா வெற்றி பெற்றனர்.

அதேபோல் புதுமையான உணவு தயாரிப்பதில் பவித்திரா செந்தில், பிங்கி என்பவர்களும் இடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற நபர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்பட்டது.