கே.ஜி மருத்துவமனை சார்பில் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் கே.ஜி மருத்துவமனை சார்பில் பொது மக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சக்கரை அளவு சரிபார்க்கும் இலவச முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம் இன்று முதல் 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இம்முகாமினை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம் துவக்கி வைத்து பேசுகையில்: கே.ஜி மருத்துவமனை சார்பாக நடைபெறும் இந்த ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சக்கரை அளவு பரிசோதனை முகாம் இலவசமாக நடைபெறுகிறது. ரேஸ் கோர்ஸ் பகுதியில் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வருகின்றனர். அவர்களுக்கு உடலில் ஏதேனும் கோளாறு உள்ளதா என்பதை கண்டறிய அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவினை பரிசோதனை செய்கிறோம். உடனடியாக இந்த ஆய்வு முடிகளும் வெளி வருகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சக்கரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார்.