ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் 17வது பட்டமளிப்பு விழா 

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 17 வது பட்டமளிப்பு விழா எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலரான சுந்தர், டாக்டர். தீபாநந்தன் ஆகியோர் பங்கேற்றனர் . ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். நிர்வாக அறங்காவலர்  சுந்தர் பட்டமளிப்பு விழாவை துவங்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர்  டாக்டர் தீபாநந்தன் வரவேற்புரையாற்றினார். தங்கள் நிறுவனத்தில் உருவாக்கியுள்ள பட்டதாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிர்வாக அறங்காவலர் சுந்தர்  பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் கூறியதாவது, பட்டதாரிகள் மற்றும் பதக்கம் வென்றவர்களை வாழ்த்தினார். மேலும் கல்வியின் முக்கியத்துவத்தையும் வாழ்க்கையின் மதிப்புகளை அதிகரிப்பதற்கான செயல்முறையைத் தொடர்வதையும் அறிவுறுத்தினர். மேலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி வெற்றிபெற வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைமை விருந்தினரான மும்பை நாயர் பல் மருத்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் டாக்டர் சுஹாஷினி ஜே நக்டா,  தனது பட்டமளிப்பு விழா உரையில், பட்டதாரிகள் தொழிலை விட அதிகமாக சாதிக்க விரும்பும் போது, பல்வேறு தொழில் வாய்ப்புகளை கவனிக்க வேண்டும் என்றார். திறன் மேம்படுத்தல் மற்றும் மனதில் இளமையாக இருக்க வாழ்நாள் முழுவதும் தொடர கற்றல் செயல்முறையை தேவை என கூறினார்.

10 துறைகளில் முதலிடம் பெற்றவர்கள் தலைமை விருந்தினரிடமிருந்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றனர் மற்றும் 96 பி.டி.எஸ்  பட்டதாரிகள், 1 எம்.டி.எஸ் முதுகலை பட்டதாரிகள் தங்கள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களைப் பெற்றனர். டாக்டர் ஹரி சக்ரிகா, சிறந்த வெளிச்செல்லும் மாணவர் விருது உட்பட 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.