மனதில் ஒளி விளக்கினை ஏற்றுவோம்! – சத்குரு

கோவை ஈஷா யோகா மையத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் மகா சிவராத்திரி இந்தாண்டும் உற்சாகத்துடன் துவங்கியுள்ளது. பெரும்திரளான பக்தர்கள் மற்றும் ஆன்மீக வாசிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மக்களவையின் சபா நாயகர் ஓம் பிர்லா மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சத்குரு “எல்லோருக்கும் வணக்கம், வரவேற்ப்பு” என்று தமிழில் பேசி தன் உறையை ஆரம்பித்தார்.

கொரோனா பெருந்தொற்றிற்கு பின்னர் இயல்பான வாழக்கை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு இப்போது நிகழும் நிகழ்வு ஒரு சிறிய ‘டெமோ’ வாக இருக்கலாம் என்ற அவர், அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார். இது ஒரு ஒளிமயமான இரவு என்றார்.

அவர் கூறியது போலவே அந்த முழு வளாகமும் அந்த பிரமிக்கவைக்கும் சிவபெருமாளின் சிலையும் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளுடன், தீபங்களோடு ஒளிமயமான மாலை பொழுதாகவே காட்சியளித்தது.

மேலும் அவர் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகள் அனைவருக்குமே மிகவும் சவாலானதாக இருந்துள்ளது எனவும், அத்துடன் பருவநிலைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது, நாடுகளுக்கிடையே பெரும் போர் துவங்கியுள்ளது, நம் மண்ணும் (soil)பாழாகி வருகிறது என்றார்.

இவற்றை செய்யும் மனிதர்கள் யாரும் கெடுதல் செய்யவேண்டும் என்று செய்வதில்லை. அவர்கள் மனதில் அறியாமை குடிகொண்டுள்ளது. அதுதான் அப்படி செய்யச்செய்கிறது. எனவே மனதில் ஒளிவிளக்கை ஏற்றினால் கண்டிப்பாக இதை வெல்லமுடியும் என்றார்.

இத்தனை துன்பங்களுக்கு நடுவே நாம் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டியது, நம் வாழ்க்கையில் மிகவும் மகத்தானது ‘வாழ்க்கை’ மட்டும் தான் என்பதையே. பணம், பொருள் அனைத்தும் மாயை தான் என்றார்.