தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறு தானியங்களிலிருந்து உணவுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும்இரண்டு நாள் பயிற்சி மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவுள்ளது.

சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப்பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் ஆகிய மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் ரூ.1500/- + 18% GST செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு : 0422 – 6611268

Source: Press Release