மரக்கன்று நடும் விழா “மனித வாழ்விற்கு வனமே ஆதாரம்”

கே.பி.ஆர் குழுமம், மத்திய சுழற்சங்கம் மற்றும் அரசூர் ஊராட்சி, வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து அரசூர் ஊத்துப்பாளையம், செட்டிக்குட்டை பகுதியில் மரக்கன்று நடும் விழா நடத்தியது. இந்நிகழ்விற்கு, கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமாசாமி தலைமை வகித்துச்சிறப்பித்தார்.

கோயம்புத்தூர் மத்திய சுழற்சங்கத்தின் தலைவர் Rtn சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். மத்திய சுழற்சங்கத்தின் மாவட்ட ஆளுநர் Rtn ராஜசேகர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தனர். அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி ஏற்புரை வழங்கினார். கணியூர் ஊராட்சித் தலைவர் வேலுசாமி மற்றும் கோயம்புத்தூர் மத்திய சுழற்சங்கத்தின் செயலாளர் Rtn பயூஸ்பட்வா ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச்சிறப்பித்தனர். அரசூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் கோவிந்தராஜ், சூலூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வ நாயகி அன்பரசு ஆகியோர் மகிழ்வுரை வழங்கினர்.

வனம் இந்தியா பவுன்டேஷனின் செயலாளர் சுந்தரராஜ் அவர்கள் பயனுரை வழங்கினார். அவர்தம் உரையில் மனித வாழ்விற்கு வனமே ஆதாரம் என்றும் மழைநீர் பருகுவதின் அவசியம் குறித்தும் விளக்கினார். மேலும் இயற்கை உணவுப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விவசாய மேன்மைகளை எடுத்துரைத்தார். கே.பி.ஆர் மில் பிரைவேட் லிமிடெடின் துணைத் தலைவர் சோமசுந்தரம் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மத்திய சுழற்சங்க உறுப்பினர்கள், கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கே.பி.ஆர் குழும ஊழியர்கள், ஊர் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.