மக்கள் நல் வாழ்வு திட்டங்களை உங்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன்

-தி.மு.க.வேட்பாளர் மீனா லோகு

கடந்த பத்து ஆண்டுகளில் எதிர் கட்சியாக இருந்த போதும் தமது வார்டில் செய்த பல்வேறு கட்டமைப்பு பணிகள் குறித்து கூறி நம்பிக்கையோடு வாக்கு சேகரிக்கும் தி.மு.க.வேட்பாளர் மீனா லோகு.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் திவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள மீனா லோகு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். கடந்த கால மாநில அரசின் பல்வேறு குறைகளை எதிர்த்து போராடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மீனா லோகு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.சார்பாக களமிறங்கி உள்ளார். மக்களின் முதல்வராம் தளபதி மு.க.ஸ்டாலினின் மக்கள் நல் வாழ்வு திட்டங்களை உங்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன் என உறுதியாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.