கொங்குநாடு கல்லூரி சார்பில் தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கோவை விவேகனாந்தபுரத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஞ்ஞான முறையில் தேனீ வளர்ப்பு பற்றிய 7 நாள் பயிற்சியை பிப்ரவரி 4 ஆம் வாரத்தில் நடத்த உள்ளது.

இந்த பயிற்சியில் தேனீக்களின் வகைகள், தேனீக்களை பராமரித்தல், அவற்றிற்கான நோய் மேலாண்மை செயற்கை முறையில் உணவு அளித்தல், தேனீ கூட்டங்களை பிரித்தல், அடைப்பெட்டி பராமரித்தல், தேனீக்களுக்கு உகந்த தாவர வகைகள் மற்றும் தேனீலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஆகியன பற்றிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் முன்பதிவு செய்யப்படும் 25 நபருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புக்கு: 6382816174/ 9952291346