நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் 4,524 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 இடங்களுக்கு 4,524 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில் 198 வார்டுகள், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகள் சேர்த்து 811 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதிநாளான இன்று மாநகராட்சியில் 778 பேர், 7 நகராட்சிகளில் 638 பேர், 33 பேரூராட்சிகளில்,1506 பேர் என மொத்தமாக 2,922 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1,128 பேர், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளில் 1,051 பேர், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 2,345 பேர் சேர்த்து மொத்தமாக 4,524 பேர் வேட்புனு தாக்கல் செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.