கே.பி.ஆர் கலை கல்லூரியில் ப்ரொபஷனல் கோர்ஸ் பயிற்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஈஸ்வர் அகாடெமியுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ப்ரொபஷனல் கோர்ஸ்(Professional course) CSEET, CMA பயிற்சி வழங்கப்பட்டது. வணிகவியல் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பயிற்சி பெற்றனர்.

CSEET தேர்வில் 9 மாணவர்களும், CMA தேர்வில் 3 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மற்றும் ஆலோசகர் ராமசந்திரன், புல முதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரும் மாணவர்களுக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனார். வணிகவியல் துறை புலமுதன்மையர் குமுதாதேவியின் வழிகாட்டுதலின் படி இப்பயிற்சியானது முன்னெடுக்கப்பட்டது. வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ஷர்மிளா இந்த பயிற்சி வகுப்பினை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார்.