பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி முன்னாள் மாணவர் சாதனை

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் ருத்திக் ரகுபதி, ஆசிய இளையோர் பாரா பேட்மிண்டன் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

4-வது ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள், அண்மையில் பஹ்ரைன் நாட்டில் நடைபெற்றது. இதில் 30 நாடுகளைச் சேர்ந்த 23 வயதுக்குட்பட்ட 750 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். பாரா தடகளம், பேட்மிண்டன், போக்கியா, கோல்பால், வலுதூக்குதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பிஎஸ்சி கணினி அறிவியல் துறையின் முன்னாள் மாணவர் ருத்திக் ரகுபதி, தனது இணையான கரணுடன் சேர்ந்து பாரா பேட்மிண்டன் போட்டியில் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மாணவர் ருத்திக் ரகுபதியை, கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் வடிவேலு, கணினி அறிவியல் துறைத்தலைவர் மரியா பிரசில்லா ஆகியோர் பாராட்டினர்.