‘போலார் பேர்’ கோவையில் புதிய கிளை துவக்கம்

கோவை காளப்பட்டி சாலை நேருநகரில் ‘போலார் பேர் தி ஐஸ் கிரீம் சண்டே ஜோன்’ (Polar Bear The Ice Cream Sundae Zone) தனது 4வது கிளையை திறந்துள்ளது. இதனை மாதம்பட்டி குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

பெங்களூரில் 2008ம் ஆண்டில் நிறுவப்பட்ட போலார் பேர் தென்னிந்தியா முழுவதும் 100 கிளைகளைத் திறந்துள்ளது. ஐஸ்கிரீம்கள் உயர்தர பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலில் பரிமாறப்படுகிறது.

இங்கு ஐஸ்கிரீம், ஐஸ் கிரீம் சண்டேஸ், மில்க் ஷேக், ஐஸ்கிரீம் கேக், சாண்ட்விச் மற்றும் எண்ணற்ற டாப்பிங்ஸ் என 100க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மெனுவில் உள்ளன. மேலும், டெத் பை சாக்லேட் போலார் பேர் அவுட்லெட்டுகளின் சிறப்பாகும்.

ஐஸ் கிரீம் சண்டேஸ்களுள் குறிப்பிடத்தகுந்த பிற தயாரிப்புகளானவை ரெட் வெல்வெட், சாக்கோ சின், ப்ரூட் ஜெஸ்ட், சாக்கோ ஸில்லா, குட்பட், டிரை ப்ரூட் ஸ்பெஷல், மேங்கோ பெர்ரி, லிச்சி சண்டே, ஐஸ் கிரீம் பிஸ்ஸா, பேனோஃபீ சண்டே மற்றும் பல.

போலார் பேர் கிளைகள் கோவையில் துடியலூர், விலாங்குறிச்சி சாலை மற்றும் சாய்பாபா காலனி ஆகிய இடங்களிலும்  உள்ளன.