எஸ்.என்.எம்.வி கல்லூரியில் ‘பாலின நெறிமுறைகளின் எதிர்காலம்’ குறித்த ஆலோசனை

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஸ்வஸ்திகா மாணவர் ஆலோசனைப் பிரிவு சமூகப்பணித் துறை சார்பாக மாணவர்களுக்கு ‘பாலின நெறிமுறைகளின் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் ஆலோசனை நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மைசூர் லைப் பார் ஆல் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஜோஹன்னா மார்த்தா எமி துரைராஜ் மற்றும் மைசூர் ரெஸ்க்யு என் ஜி ஓ சைபர் எதிக்ஸ் விரிவுரையாளார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லினி பாபு ஆகியோர் கலந்து கொண்டு இளங்கலை வணிகவியல் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்.

மாணவர்களிடம் மரியாதை, நேர்மை மற்றும் ஆபாசத்திலிருந்து விலகி இருத்தல், ஒழுக்கக்கேடான பாலுறவு நடத்தையின் முக்கியத்துவம் என பல தலைப்புகளையொட்டி ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்வு தனிநபர் மற்றும் சமூக ஆரோக்கியம் மற்றும் மக்கள்தொகை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக நடத்தப்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்வில் 869 மாணவர்கள் மற்றும் பல்துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆலோசனையில் கலந்து கொண்டு பங்கேற்ற மாணவர்களுக்கு ஜோஹன்னா மார்த்தா எமி துரைராஜ் சான்றிதழ் வழங்கினார்.