என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில் நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, பைன்ஸ்பியர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தோடு சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கு வலைதளம் உருவாக்குதல், கைபேசி செயலி உருவாக்குதல் போன்ற திறன்களையும், தொழில் சார்ந்த பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும். அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் தங்களின் தனித்திறன்களை வளர்க்க ஒரு வாய்ப்பாக அமையும்.

பைன்ஸ்பியர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழில் துறையானது தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சிறப்பான, நம்பகமான தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்த ஒப்பந்தமானது டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி செயலாளர் தவமணி பழனிசாமி மற்றும் பைன்ஸ்பியரின் இணை நிறுவனர் வசந்த் நாகராஜ் ஆகியோரால் நிறைவேற்றப்பட்டது.

இதில் KMCR&ET−ன் தொழில் வளர்ச்சி இயக்குனர் மதுரா பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி.தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் பிரபா, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் பழனிக்குமார் மற்றும் துறைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.