கே.பி.ஆர் கல்லூரி, அறம் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி அறம் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆங்கிலத் துறையின் உதவிப் பேராசிரியரும், தலைவருமான விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை உரை வழங்கி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அறம் அறக்கட்டளையின் நிறுவனர் மாதவன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில், பொதுமக்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சியளிப்பது மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது இவ்வொப்பந்தத்தின் குறிக்கோளாகும் என எடுத்துரைத்தார்.

இவ்வொப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சி, தகவல் தொடர்புத் திறன் போன்ற பல்வேறு வகையான பயிற்சிகள் குறித்து விவரித்தார்.

அறம் அறக்கட்டளையின் கள ஒருங்கிணைப்பாளர் சச்சின் குமார், கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் புல முதன்மையர்கள், ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.