தமிழக அரசு பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவ வேண்டும்

தமிழக அரசு பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவ வேண்டும்

குமரகுருபர சுவாமிகள்

தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக ஓலைச்சுவடி துறையும் சிரவையாதீனத் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையமும் இணைந்து நடத்தும் அனைத்துலக முருக இலக்கிய மாநாடு மற்றும் கருத்தரங்கம் சிரவணபுரம் கௌமார மடாலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் குமரகுருபர சுவாமிகள் கூறுகையில், மே 4,5,6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெரும் இம்மாநாட்டில் தமிழறிஞர்கள், மாணவர்கள் என சுமார் 240 தமிழ் இலக்கிய கட்டுரைகளை சமர்பித்துள்ளனர். இதில் ஆய்வு மாணவர்கள் அதிக அளவில் கட்டுரைகளை எழுதி கொடுத்துள்ளனர். இது தேசிய அளவில் நடைபெறும் மாநாடு என்பதால் ஆய்வு மாணவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். மலேசியா, லண்டன் போன்ற பிற நாடுகளில் இருந்தும் குறிப்பாக தமிழ் இலக்கிய சிறப்பு குறித்து கட்டுரை எழுதியுள்ளனர். மேலும் மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஒவ்வொரு நாளும் தமிழ் பாரம்பரியத்தை போற்றக் கூடிய வில்லுபாட்டு, கந்தபுராணம் மற்றும் நாடகங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அரசாங்கம் உதவி புரிய வேண்டும்

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தொலகாப்பியம் மிகவும் பழமையான நூல் என்பது அனைவரும் அறிந்ததே. அந்நூலிலே முருகக் கடவுள் பற்றி பேசப்பட்டிருக்கிறது. ஆகவே நமது தமிழ்க்கடவுளான முருகப் பெருமானை போற்றும் வகையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முதல் பழநி பாதயாத்திரை பக்தர்கள் 44 பேர் இறந்தனர். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசாங்கம், பாதயாத்திரை பக்தர்களுக்கு நடை பாதை வசதி, மருத்துவ வசதி போன்றவைகளை செய்து கொடுக்க வேண்டும்.

அத்துடன், பிறசமய வெளிப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழ் இறை வழிபாட்டில் மக்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக்காக இம்மாடு இருக்கும் எனலாம்.