பார்க் எலான்ஸா ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்களுக்கான மூலப் பொருள்கள் கலக்கும் திருவிழா கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள பார்க் எலான்ஸா ஹோட்டலில் நடைபெற்றது. பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழா, கிறிஸ்துமஸ் விழாவிற்கான துவக்க விழாவாகக் கருதப்படுகிறது.

பார்க் எலான்ஸா ஓட்டல் நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார் மற்றும் புவனா ஆகியோர், தலைமை வகித்து, கேக் கலவை கலக்கும் விழாவை துவக்கி வைத்தனர். இதில்,முக்கிய விருந்தினர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள், சமையல் கலை நிபுணர்கள் ஆகியோர் இணைந்து, கேக் தயாரிக்கும் கலவையுடன் தேங்காய், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் கறுப்பு கரும்பு, அத்திப்பழம், உலர்ந்த உப்பு, இலவங்கப் பட்டை மற்றும் கிராம்புகள் ஆகியவையுடன் சேர்த்து, விஸ்கி, ரம், ஓட்கா, ஜின், பீர் போன்ற மதுக்களும் தங்கப் பாகு, வெல்லப்பாகு, தேன் மற்றும் வெண்ணிலா சாரம் ஆகியவை சேர்த்து கலக்கினர்.

இது குறித்து பார்க் எலான்சா ஓட்டலின் உணவு மற்றும் பானங்கள் மேலாளர் ரவீந்திரன் கூறுகையில், தற்போது கலக்கப்பட்ட இந்த கேக் கலவை கிறிஸ்துமஸ் வரை காற்று புகாத பைகளில் அடைத்து வைத்து, கேக் தயாரிக்கப்படும். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெறும் கேக் கலவை கலக்கும் திருவிழாவில் பங்கேற்போருக்கு அது மறக்க முடியாத சிறப்பு நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஓட்டலின் செயல் தலைவர் தினகரன், மற்றும் ஹோட்டல் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.