பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 

பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரியின் பட்டமளிப்பு இன்று (27.04.18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் ஆர்.நந்தகோபால் வரவேற்புரை வழங்கினார். மேலாண் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரக ஜெனரல் ராபெர்ட் ஜி.பர்கெஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். டொலீடோ பல்கலைக் கழகத்தின் வணிக புதுமைக் கல்லூரியின் தலைவர் ஹாசன் ஆர்.ஹசப்எல்நபி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில், எம்பிஏ 160 பேரும், பகுதி நேர எம்பிஏ 24 பேரும் டொலீடோ பல்கலைக் கழக எம்பிஏ 62 பேரும், மேலாண்மை பட்டயப் படிப்பில் 55 பேரும் மொத்தம் 301 பட்டம் பெற்றனர்.