பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித் தொகை: தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் தேர்வு

கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரி கல்வி உதவித் தொகையானது வழங்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித் தொகையானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நானோ தொழிநுட்பத்தைச் சார்ந்த பிரதீப் மற்றும் சண்முகப்பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகையானது ஆளில்லா விமானம் மூலம் நானோ உர உருவாக்கம் பயிர்களினூடே ஊடுருவி செலுத்தும் முறை மற்றும் தாவர நூற்புழு பூஞ்சை நோய்க்கிருமிகளை நிர்வகிக்க நானோ உயிர் கலப்பின நோய்க் கிருமிகளை பயன்படுத்துதல் ஆகிய தொழில்நுட்ப ஆரய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி ஆரய்ச்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.