அரிமா சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

கோவை நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக பசிப்பிணி போக்குவது, கொரோனா கால பேரிடர் சமயங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவது, முக கவசம், சானிடைசர் மற்றும்  கொரோனா கிட் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரு நகர் கிழக்கு, மேற்கு, கோல்டு வின்ஸ் பகுதிகளில் பணியாற்றும் மாநகராட்சி வார்டு 34, 35, 36க்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் சுமார் 200 பேருக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இதில், சுதந்திர தின விழிப்புணர்வு மாவட்ட தலைவர் காளியப்பன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் முகம்மது செமீக், முன்னாள் தலைவர்கள் நந்தகுமார், சுகுமார், முன்னால் செயலாளர் ஜெகதீசன், வார்டு செயலாளர் குபேந்திரன், முன்னாள் வட்டார தலைவர் லோகநாதன், நேரு நகர் ரவிச்சந்திரன், செல்வராஜ், ராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.