எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பால் உள்ளிட்ட அத்தியாவாசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவை தெற்கு தலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.பி.ஐ.மத்திய மண்டல செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ.நிர்வாகிகள் பழனிசாமி, யு.கே.சுப்ரமணியம், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.