அத்வைத் டெக்ஸ்டைல்ஸ்சின் நவராத்திரி கொண்டாட்டம்

புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. கோவில்களிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி விழா  7ம் தேதி தொடங்கி 15ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில் அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் வளாகத்திலும் இந்த கொலு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 20 வருடமாக இந்நிகழ்ச்சி அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தால் முன்னெடுத்து நடத்தப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளன்று கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தொடங்கப்பட்டது.

நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களால் இந்த கொலு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுபோன்ற விழாக்கள் பாரம்பரியமும், காலச்சாரமும் நம்மை விட்டு நீங்காத வகையில் இருப்பதற்க்காகவும், வேலைக்கு நடுவே சில கொண்டாட்டங்களும் அவசியம் என்ற நோக்கிலும் கொண்டாடப்படுகிறது.

வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் சீனியர் ஜெனரல் மேனேஜர் சந்திர சேகர், ஹெச்.ஆர் மேனேஜர் கனகராஜ், நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.