டேட்டிங் ஆப்களுக்கு 50 % தாய்மார்கள் ஆதரவு

இந்தியாவில் டேட்டிங் தொடர்பான தற்போதைய எண்ணங்களைக் கண்டறிய ட்ரூலிமேட்லி நடத்திய கணக்கெடுப்பில், 67 சதவிகித தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் காதல் திருமணத்தை அங்கீகரிப்பது தெரிய வந்துள்ளது. டேட்டிங் ஆப்களுக்கு 50 சதவீத தாய்மார்கள் ஆதரவளித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் 67 சதவீத அம்மாக்கள் காதல் திருமணத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.

1 மற்றும் 2 அடுக்கு நகரங்களில் இருந்து கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பெண்களிலும் மற்றும் 80 % ஆண்களில் பதிலளித்தவர்கள் தங்கள் தாய்மார்கள் காதல் திருமணத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டனர்.

பதிலளித்த இசட் தலைமுறை மற்றும் மில்லினியல்களின் தாய்மார்கள் 50 சதவிகிதம் பேர் டேட்டிங் பயன்பாடுகளைப் பயன்படுத்தி வாழ்க்கைத் துணைவர்களைக் கண்டுபிடிப்பதில் நம்பிக்கை வைத்துள்ளனர் .

பதிலளித்தவர்களில் 60 % தாய்மார்கள் தங்கள் மகள்களின் வேலை மற்றும் படிப்பைக் காட்டிலும் திருமணத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அதேநேரம் 46 % தாய்மார்கள் தங்கள் மகன்களின் வேலை மற்றும் படிப்பைக் காட்டிலும் திருமணத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 54 % தாய்மார்கள் தங்கள் மகன்களின் கல்வி மற்றும் வேலை குறித்து கவலை கொள்கின்றனர்.

ட்ரூலிமேட்லியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்னேஹில் கானோர், இந்தியாவில் டேட்டிங் பற்றிய களங்கங்கள் மற்றும் அச்சங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் எதிர்நோக்கினோம். ஆனால் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களின் மனமாற்றத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். நம் சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகள், பாலின பாகுபாடு குறைப்பு, பாலின சட்டங்களுக்கு எதிராக நிற்பது ஆகியவை இந்த பரிணாம வளர்ச்சியின் பெரும்பகுதி ஆகும் என நான் நம்புகிறேன்.

மேலும், தாய்மார்கள் திரைப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதிக உள்ளடக்கத்தை நுகர்வது திருமணம் தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாட்டில் தாய்மார்கள் வகிக்கும் பங்கைக் கருத்தில் கொண்டு, இளைய தலைமுறையினர், திருமண விஷயத்தில் உரிமையை இழந்ததாகத் தோன்றினாலும், வரும் ஆண்டுகளில் அதை இன்னும் தீவிரமாக பரிசீலிப்பார்கள் என்று கருதுவது பாதுகாப்பானது எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் டேட்டிங் செயலியாக, பயனர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க உதவுகிறது, ட்ரூலிமேட்லி மில்லினியல்கள் மற்றும் இளைய தலைமுறையினரை தேர்வு அடிப்படையில் முடிவெடுப்பது, திருமணம் மற்றும் உறவு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல்வேறு விஷயங்களில் முன்னணியில் உள்ளது.