கோவையில் புதிய தொடக்கமாய் நியூ லைஃப் சோசியல் வெல்பர் டிரஸ்ட்

சமுதாயத்தில் பின்னடைந்த பல்வேறு பிரிவினருக்கு உதவும் வகையில் கோவையில் நியூ லைஃப் சோசியல் வெல்பர் டிரஸ்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவன தொடக்க விழா ராம்நகரில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்ட்டின் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரி மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் வள்ளியம்மாள் அறக்கட்டளையின் தலைவர் சேவா ரத்னா வள்ளியம்மாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அறக்கட்டளையை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிறுவனர் கோவர்தனன் பேசுகையில், சென்னையில் ஓராண்டு காலமாக வெற்றிகரமாக அறக்கட்டளை நடத்தி வருகிறோம். தற்போது கோவையில் தொடங்கி உள்ளோம். வறுமை நிலையிலுள்ள மாணவ மாணவர்களுக்கு கல்வி சேவை, மற்றும் ஆதரவற்றோருக்கு உதவி தொகை, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொருட்கள் வழங்குதல், விதவைப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறோம்.

கோவையில் தொடங்கங்கப்பட்ட அறக்கட்டளை மூலம் ஏராளமான உதவிகளையும், சமூக சேவைகளையும் வழங்க காத்திருக்கிறோம். விரைவில் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். கோவையில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.

விழாவில் கோவை மாவட்ட ஆட்டோ கன்சல்டிங் அசோசியன் செயலாளர் பாலகிருஷ்ணன், டாக்டர் சுகுணா பிரியா, போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப் இன்ஸ்பெக்டர் மாலதி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் டிரஸ்ட் நிறுவனர் கோவர்தனன், தலைவர் வெற்றி குமார், பொருளாளர் தீபா ரமணி, எஸ்தர், யசோதா, லில்லி வின்சன்ட், சேவியர் ஆகியோர் பங்கேற்றனர்.