கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இருதய ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம்

கோவை கே.எம் .சி.ஹெச் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இருதய ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 13 ம் தேதி தொடங்கிய இந்த முகாம் அக்டோபர் 9 வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் அதிக புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள், இரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து மாரடைப்பை ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெற்று குணம்பெறலாம்.

இந்த சிறப்பு முகாமில் ரூபாய் 4000 மதிப்புள்ள இருதய பரிசோதனைகள் ரூபாய் 1250/- க்கு செய்யப்படுகிறது. இதில் சர்க்கரை நோய் பரிசோதனை , கொழுப்பு சத்தின் அளவு ,எக்கோ அல்லது டி.எம்.டீ , ஈ.சி.ஜி மற்றும் மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது.

கே.எம்.சி.ஹெச் அவினாசி ரோடு, கே.எம் .சி.ஹெச் சிட்டி சென்டர், ராம்நகர், கே.எம்.சி.ஹெச் சூலூர் சென்டர், கே.எம்.சி.ஹெச் கோவில்பாளையம் சென்டர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

முன்பதிவிற்கு: 733 9333 485