பாரதியார் பல்கலையில் பாரதி நினைவு 100 ஆண்டு விழா

மகாகவி பாரதியார் நினைவு நாளையொட்டி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு மலரஞ்சலியும், இசையஞ்சலியும் செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மலரஞ்சலி செலுத்தி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதிக்காக முன்னெடுத்து வரும் பணிகளை நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் முருகவேல், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

மகாகவி பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த 9 ம் தேதி இணைய வழியில் நடைபெற்ற நிகழ்வில் துணைவேந்தர் காளிராஜ் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில் பாரதியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் நினைவு நூற்றாண்டு காலத்தில் பணியாற்றுவதைப் பெருமிதமாக உணர்வதாகத் தெரிவித்தார்.

மேலும் இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், சமூக விடுதலை, பெண் விடுதலை, தேச விடுதலை, பொருளாதார்ச் சமத்துவம், சாதி எதிர்ப்பு, தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றில் பாரதியின் எழுத்துக்கள் பற்றியும், சொற்பொழிவார் உள்ளிட்ட அவரின் பன்முக ஆளுமை பற்றி உரையாற்றினார்.