எஸ்.என்.எம்.வி கல்லூரி ஓட்டுநர்களுக்கு பாராட்டு

பிரதம மந்திரி திறன் மேம்பாடு திட்டத்தின் (PMKVY) கீழ் கோவை தொழில்முறை திறன் பயிற்சி மற்றும் ஆலோசனை பிரைவேட் லிமிடெட் நடத்திய ஓட்டுநர்களுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சியில் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி திட்டத்தில் ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு, தற்காப்புடன் வாகனம் ஓட்டுதல் பற்றிய பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சி ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலம் ஓட்டுநர்களுக்கு மூன்று ஆண்டிற்கான ரூ. 2 லட்ச தனிநபர் விபத்து காப்பீடும், ரூ.500 ஊக்கத்தொகையும் மற்றும் மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் இப்பயிற்சி ஓட்டுநர்களுக்கு தங்களின் திறனை மேம்படுத்தி ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஓட்டுநர்களைக் கல்லூரி நிர்வாகத்தினரும், கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்