தேசிய திறனாய்வுத் தேர்வில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சாதனை

தேசிய திறனாய்வுத் தேர்வில் கோவையை சேர்ந்த ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ, மாணவியர்கள் 9 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை அறிய NTSE எனும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகின்றது. திறமையான மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நோக்கத்தில் நடைபெறும் இதில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்.

இந்நிலையில்,2020-21ம் ஆண்டிற்கான தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த 52 மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவிகள் 9 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற பிரியதர்ஷினி, நரேன், தன்யா, அஸ்வந்த் நிவேதிதா, விமல், அமிர்தா, சஞ்சய், அகிலன், ஆகிய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி இயக்குனர் ஷீமா போபண்ணா, மற்றும் நாகேந்திரா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிர்வாக பொது மேலாளர், ஹரிபாபு துணைப் பொது மேலாளர் நாகேஸ்வர ராவ், மண்டல பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் மாலதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.