ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘உலக உடல் உறுப்புகள் தான தினம் கடைபிடிப்பு’

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் உலக உடல் உறுப்புகள் தான தினம் (13.08.2021) கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 200 நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் தங்களின் உடல் உறுப்புகள் தானம் செய்ய தன்னார்வமாக முன்வந்தனர். அதற்கான உறுதிமொழிப் படிவங்களை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவி பவித்ரா, தேசிய மாணவர் படை மாணவி மேகா ஆகியோர், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்  டி.லட்சுமிநாராயணஸ்வாமி அவர்களிடம் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து இணையவழியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் பரதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உடல் உறுப்புகள் தானத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.சுகுமாரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி செயலர் மற்றும் முதல்வர் முனைவர் பி.எல்.சிவக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.