பெண் காவலருக்கான உடற்தகுதித் தேர்வு

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் 400 பெண் காவலருக்கான உடற்தகுதித் தேர்வு (02.08.2021) துவங்கியது.

காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 இரண்டாம் நிலை காவலர் காண எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதை ஒட்டி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் சென்ற வாரம் துவங்கியது.

இதேபோல் கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் ஆண் காவலருக்கான உடற்தகுதி தேர்வு துவங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் 400 பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

இதில் முதலில் 1500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதையொட்டி கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் கோவை சரக டிஐஜி முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.