டிஜிட்டல் உலகின் “#மாஜ் சூப்பர் ஸ்டார் ஹன்ட்” போட்டி

குறும்பட செயலியான மாஜ்(Moj), முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடித்தல், நடனம், காமெடி, மாறுபட்ட நடிப்பு, தனித்திறன் என 5 பிரிவுகளில் திறன்மிக்கவர்களை கண்டறிய #மாஜ் சூப்பர் ஸ்டார் ஹன்ட் (#MojSuperstarHunt) என்ற போட்டியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போட்டியானது, இரண்டு கட்டமாக 47 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, 25 பேர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர். இறுதி போட்டியில் பங்கேற்கும் 25 பேர், ஆலோசனை திட்டத்தில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். இவர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு அடுத்த மாஜ் சூப்பர் ஸ்டார்களாக அறிவிக்கப்படுவர்.

2021 ஜூலை 15ல் துவங்கிய இந்த போட்டி, ஆகஸட் 31 அன்று இறுதிச்சுற்றுடன் முடிவடைகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் முதல் 5 பேருக்கு 5 லட்ச ருபாய் பரிசாக வழங்கப்படும். இந்த 5 பேரில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்யப்பட்டு 10 லட்ச ருபாய் பரிசு வழங்கப்படும்.

இந்த திறன் தேர்வு போட்டி குறித்து மாஜ் கன்டன்ட் ஸ்ட்ரேடஜி இயக்குனர் சசாங் சேகர் பேசுகையில், ” எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் படைப்பாளர்களுடன் எங்களது முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாட விரும்பினோம். #MojSuperstarHuntஐ, அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் திறன்மிக்க படைப்பாளிகளை தேடி கண்டுபிடிக்க இது உதவியாக இருக்கும். அந்த படைப்பாளிகள், சிறப்பான நிலையை அடையவும், வெற்றி பெறவும் வாய்ப்பாக இது அமையும்,” என்றார்.

படைப்பு திறன்மிக்கவர்களை தேர்வு செய்யும் நடுவராக செயல்படும் ரெமோ டி சசோ பேசுகையில், ” புதிய கலைஞர்களை கண்டறியும் இந்த புதுமையான  முறை, மிகப்பெரும்  திட்டம். இது, இளம் கலைஞர்கள் துளிர்விட பேருதவியாக இருப்பேதாடு, புதிய டிஜிட்டல் தலைமுறையை உயர்த்தும். நாடு முழுவதும் உள்ள படைப்பு திறனாளிகளை ஒரே இடத்தில் பார்ப்பது பரவசமாக இருக்கும்,” என்றார்.